இலங்கை விமானப்படை "எங்கள் கனவு உலகம்" என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இவ்வருட உலக சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தது.
இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .சார்மினி பத்திரண வழிகாட்டலின்கீழ் ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது விமானப்படை சேவா வனிதா பிரிவினால் "குவன் ரந்தரு சித்தம் 2022" எனும் சித்திரப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு விமானப்படை தளபதி பரிசில்களை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Add new comment