இறால் தொட்டிலில் மிதந்து வந்த சடலம்

யாழ். திருவடிநிலையில் சம்பவம்

யாழ்ப்பாணம் – மாதகல் திருவடிநிலை கடலிலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருவடிநிலை கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையிலுள்ள தொட்டியில் சடலம் காணப்பட்டதாகவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Add new comment

Or log in with...