மின்சாரம், எரிபொருள், மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசியம்

- ஜனாதிபதியால் மீண்டும் அதி விசேட வர்த்தமானி

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புக்கமைய, ஜனாதிபதி செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல், விநியோகம் என்பனவும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வைத்தியசாலைகள் உட்பட நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்களிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை தடையின்றி கொண்டு செல்வதற்காக இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

PDF File: 

Add new comment

Or log in with...