'ஈவா' கூடைப்பந்தாட்டம்: டிசம்பரில் நடத்த ஏற்பாடு

மேல்மாகாண கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் ‘ஈவா’ கூடைப்பந்தாட்ட போட்டிகள் வரும் டிசம்பர் 03, 04ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள இலங்கை விமானப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு, நிப்போன் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போட்டி ஏற்பாடுகள் தொடர்பில் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர்.

ஐ.சி.எல் பிரேன்ட் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தால் அனுசரணை வழங்கும் இப் போட்டி, நாடு முழுவதிலுமுள்ள விளையாட்டு கழகங்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்புகளும் பங்குபற்றும் திறந்த போட்டியாகவே நடைபெறவுள்ளது. 04 பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு வரும் நவம்பர் 25ஆம் திகதி மற்றும் அதற்கு முன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


Add new comment

Or log in with...