உக்ரைனில் வாகனங்கள் மீது தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய ஆளுநர் ஸ்டாருக் ஒன்லைன் வாயிலாக வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும், வீதியில் உடல்கள் கிடப்பதையும் அந்த படங்களில் காண முடிகிறது. இதுதொடர்பாக ரஷ்யா தரப்பில் உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி படையெடுத்ததோடு ஜபோரிஜியா பிராந்தியத்தின் பெரும்பகுதி தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமும் ரஷ்யா வசம் உள்ளது.

எனினும் அந்தப் பிராந்தியத்தின் தலைநகரை ரஷ்யாவால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை.


Add new comment

Or log in with...