யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (30) அவரது மனைவி கிருசாந்தினி (26) ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று (01) அதிகாலை 4.15 மணியளவில் தம்பதி உறங்கிய அறை தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த அறையில் ஏற்பட்ட மின் ஒழுக்கைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பெற்றோலில் பரவியதில் இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக, கண்டறியப்பட்டுள்ளதாக, தடயவியல் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பருத்தித்துறை விசேட நிரூபர்
Add new comment