'தி பப்பரே சம்பியன்ஷிப்' தொடர் ஆரம்பம்

விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஒழுங்கு செய்திருக்கும், 3ஆவது திபப்பரே கால்பந்து சம்பியன்ஷிப் நேற்று (29) ஆரம்பமானது.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்படும் இந்த ஆண்டுக்கான தொடரில் இலங்கையில் கால்பந்து விளையாட்டில் முன்னணியில் உள்ள இருபது முன்னணி பாடசாலைகள் பங்கேற்றுள்ளன.

2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது பருவகாலத்துக்கான இறுதிப் போட்டியில் கொழும்பு புனித பேதுரு கல்லூரியை தோற்கடித்த கொழும்பு ஸாஹிரா கல்லூரி தொடரின் நடப்புச் சம்பியனாக இம்முறை போட்டியில் களமிறங்குகிறது.

தொடரின் முதல் சுற்றில் ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறவுள்ளதோடு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.


Add new comment

Or log in with...