தம்பலகாமம் பிரதேச செயலக கழக அணிக்கு பத்து பதக்கங்கள்

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் 47ஆவது மாகாண மட்ட விளையாட்டு விழாவில் தம்பலகாமம் பிரதேச செயலக கழகம் சார்பாக பங்குபற்றிய வீரர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.

கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் அண்மையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இந்த வீரர்கள் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி ஸ்ரீபதி வழிகாட்டலுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம். ஹாரிஸ் சிறப்பாக வழிநடாத்தியதுடன் இவர்களுக்கான பயிற்சியையும் வழங்கினார்.

கந்தளாய் தினகரன் நிருபர், தம்பலகாமம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...