யாழ். மத்தியக் கல்லூரி அணிக்கு இலகு வெற்றி

இலங்கை 19 வயதின் கீழ் பிரிவு மூன்று பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த புதன்கிழமை (28) நடைபெற்ற போட்டியில் யாழ். மத்தியக் கல்லூரி அணி, ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலையை வீழ்த்தி வெற்றிபெற்றது.

தங்களுடைய சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற யாழ். மத்தியக் கல்லூரி எதிரணிக்கு முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. எனினும் ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை 176 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பந்துவீச்சில் ஆனந்த கஜன் 4 விக்கெட்டுகளையும் விதுசன் 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர். பதிலெடுத்தாடிய யாழ். மத்தியக் கல்லூரி 31.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. மதீஷ்வரன் சஞ்சயன் (69) மற்றும் நிஷான்தன் அஜன் (50) அரைச்சதம் பெற்றனர்.


Add new comment

Or log in with...