யா/ஈவினை தமிழ்க் கலவன் பாடசாலையில் திறன் வகுப்பறை கற்றல் ஆரம்பம்

ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் மற்றும் லண்டன் வாழ் ஈவினை, புன்னாலைக்கட்டுவன் ஒன்றியம் U.K, லண்டன் பழைய மாணவர்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் யா/ஈவினை அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை ஒன்றில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இக்கல்லூரியின் முதல்வர் ம.தரணீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வலிகாமம் கல்விவலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரனும்,சிறப்புவிருந்தினர்களாக யா/பிரான்பற்று கலைமகள் வித்தியாலய அதிபர் சோ.ஸ்ரீகிருஷ்ணாவும்,வளவாளராக சி.சிவரதீஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.

வலயக் கல்விப்பணிப்பாளரால் திறந்து வைக்கப்பட்ட திறன் வகுப்பறையானது கல்விப்பணிப்பாளரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் ஒருவரால் கற்றல் செயற்பாடு நடத்தப்பட்டதுடன், மாணவர்களும் தமது செயற்பாட்டை திறன்பலகையில் செய்து காண்பித்தனர்.

"பின்தங்கிய, அடிப்படை வசதிகள் குறைந்த இப்பிரதேசத்தில் இத்தகைய கல்வி வசதி கிடைத்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும். இதனைப் பயன்படுத்தி நாம் உச்சப்பயனைப் பெறுவோம்" என்று பாடசாலையின் மாணவத் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

உதவியளித்திருந்த லண்டன் வாழ் ஈவினை, புன்னாலைக்கட்டுவன் ஒன்றியம், லண்டன் பழைய மாணவர்கள், மற்றும் இரட்ணம் பவுண்டேசன் அமைப்புக்கும் அதிபர் மற்றும் விருந்தினர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது. திறன்பலகையை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தி சிறப்பாகத் துலங்கலாம் என்பது பற்றிய அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

எச்.எச். விக்ரமசிங்க...


Add new comment

Or log in with...