காத்தான்குடியில் பூப்பந்து உள்ளக அரங்கு திறப்பு

காத்தான்குடி பிரதேசத்தின் நீண்டகால தேவையாக இருந்த பூப்பந்து உள்ளக அரங்கு அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.சி.எம்.ஏ சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவும் விசேட அதிதியாக நகரபிதா எஸ்.எச்.எம் அஸ்பரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பூப்பந்து விளையாட்டு வீரர்கள் இடையே நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் நடைபெற்றது.

காத்தான்குடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூப்பந்து உள்ளக அரங்கு யெஸ்டோ அமைப்பினால் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திராய்க்கேணி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...