இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளோம்

- ஜனாதிபதி ரணிலிடம் சிங்கப்பூர் பிரதமர் தெரிவிப்பு
- சிங்கப்பூர் சுதந்திர வர்த்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை: ஜனாதிபதி
- 75ஆவது சுதந்திர தின நிகழ்விற்கு அழைப்பு விடுவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ்  சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த  சந்திப்பின்  போது   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை  வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும்  எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர்  பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அழைப்பு விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...