- சீரமைக்க 3 தொடக்கம் 5 நாட்கள் செல்லும்
- மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும்
- விரைவில் புதிய நேர அட்டவணை வெளியிடப்படும்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆவது மின்னுற்பத்தி தொகுதியின் கோளாறு காரணமாக அது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட மின்வெட்டு நேரம் மேலும் நீடிக்கப்படலாம் என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதற்கமைய, உரிய மின்வெட்டு அட்டவணை மிக விரைவில் அறிவிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீராவி கசிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 03 ஆவது மின்னுற்பத்தி தொகுதி நிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கைக மின்சார சபை தமக்கு அறிவித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
CEB has informed that the Unit 3 of Norochcholai power plant has been shut down due to a steam leak. Maintenance work estimated to take 3-5 days. Fuel Power Plants will be utilized to manage the Power generation until the repair work is completed.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 27, 2022
இதனை வழமைக்கு கொண்டு வர 3 தொடக்கம் 5 நாட்கள் வரை செல்லலாமெனவும், சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை எரிபொருள் மின்னுற்பத்தி நிலையங்களைப் பயன்படுத்தவுள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றையதினம் (27) செவ்வாய்க்கிழமை 2 மணித்தியாலங்கள் 2 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
செப்டெம்பர் 27: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- பி.ப. 3.00 - பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
- பி.ப. 6.00 - பி.ப. 10.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
<<மின்வெட்டு அட்டவணை செப்டெம்பர் 26.pdf>>
<<பிரதேசங்கள்-ABCDEFGHIJKL.pdf>>
<<பிரதேசங்கள்-PQRSTUVW.pdf>>(பிரதேச ரீதியான மின்வெட்டு அட்டவணை விரைவில் இணைக்கப்படும்)
Add new comment