'நம்பிக்கையுடனான மாதவிடாய்': பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்தல்

- நாளை ட்விட்டர் ஸ்பேஸ் ஊடாக நேரடி கேள்வி - பதில்

'நம்பிக்கையுடன் மாதவிடாயை எதிர்கொள்வதற்கான கொள்கை உருவாக்கம்' எனும் தலைப்பிலான ட்விட்டர் ஸ்பேஸ் நேரடி விவாதம் நாளை (21) காலை 11.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

இலங்கையில் பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்வதன் தேவை தொடர்பில் சுகாதார அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோர் கலந்துகொள்ளும் இந்நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் பாராளுமன்ற உத்தியோகபூராவ ட்விட்டர் (@ParliamentLK) கணக்கினூடாக இடம்பெறவுள்ளது.

இந்நாட்டில் பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பான பொதுமக்கள் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், அன்றைய தினம் நேரடியாக இணைந்து கொண்டும் கேள்விகளை முன்வைக்க முடியும்.

பொதுமக்கள் மைய பாராளுமன்றத்திற்காக மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்துவருகின்றது.


Add new comment

Or log in with...