சம்பிக ரணவக்கவின் விபத்து வழக்கு 2023 மார்ச் வரை ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்கவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் 2023 மார்ச் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து போலியான சாட்சியங்களை தயாரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றையதினம் (15) உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...