திங்கள் நள்ளிரவு முதல் Litro சிலிண்டர்கள் விலை மேலும் குறைப்பு

செப்டெம்பர் 05ஆம் திகதி நள்ளிரவு முதல், Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக, லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, திருத்தப்படும் புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 09ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டன:

  • 12.5kg - ரூ. 246 இனால் குறைப்பு
  • 5kg - ரூ. 99 இனால் குறைப்பு
  • 2.3kg - ரூ. 45 இனால் குறைப்பு

அதன் அடிப்படையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் லிட்ரோ சிலிண்டர்களின் விலைகள்:

  • 37.5kg - ரூ. 18,150
  • 12.5kg - ரூ. 4,664
  • 5kg - ரூ. 1,872
  • 2.3kg - ரூ. 869

நாடளாவிய ரீதியில் லிட்ரோ சிலிண்டர்களின் விலைகள் வருமாறு:


Add new comment

Or log in with...