கர்ப்பிணி தாய்மாருக்கு ரூ. 20,000 கொடுப்பனவிற்கு மேலதிகமாக ரூ. 2,500

- உணவு நெருக்கடிக்குள்ளான 61,000 குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 10,000
- சிறு மீன்பிடி படகு உரிமையாளர்கள், பெருந்தோட்ட மக்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம்

இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்பொழுது  வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவிற்கு மேலதிகமாக மாதாந்தம் மேலும் 2,500 ரூபா கொடுப்பனவை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

மிகவும் அவசர உதவி தேவைப்படும் போஷாக்குக்  குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 61,000  குடும்பங்களுக்கு இவ்வருடத்தில் எஞ்சியுள்ள 4 மாதங்களுக்கு மாதாந்தம் ரூ. 10,000 கொடுப்பனவை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட திட்டங்களை செயற்படுத்த 4 மாதங்களுக்கு ரூபா 46,600 மில்லியனை ஒதுக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள கடற்றொழிலில்   ஈடுபட்டுள்ள  சிறு  மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கும்  மின்சார  வசதியற்ற  பெருந்தோட்ட பிரதேசங்களில்  வாழுகின்ற  மக்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...