Tuesday, August 30, 2022 - 1:00pm
இன்றையதினம் (30) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு - செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் எனும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (30) பிற்பகல் 1.00 மணிக்கு இடைக்கால வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் செலவினங்களுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட குறைநிரப்பு பிரேரணை சட்டமூலம் மீதான விவாதம், நாளை (31) மற்றும் செப்டெம்பர் 01, 02ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
Add new comment