வசந்த முதலிகே உட்பட நால்வர் நேற்று கைது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்புச் செயலாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவருக்கு எதிராக இதற்கு முன்னர் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஏற்பட்ட அமைதியின்மையையடுத்து அவர் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியையடுத்து ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...