பொருளாதார நிலையில் சாதகமான பிரதிபலன்கள்

கடன்பெற வேண்டிய நிலையிலிருந்து நாடு மீண்டு வருகிறது

ஊடகவியலாளர்  மாநாட்டில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசேக்கர நேற்று தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரம் தற்போது சாதகமான நிலைக்குத் திரும்புவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கடன் பெற வேண்டிய நிலை காணப்பட்டபோதும் தற்போது அதிலிருந்து மீண்டு நாட்டின் பொருளாதாரம் சாதகமான பிரதிபலன்களை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான நிதிக் கொள்கை தீர்மானங்கள் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்த வருடத்தின் ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் நாட்டுக்கான அத்தியாவசிய பொருட்களான எரிபொருள், உணவு, மருந்துப் பொருட்கள், எரிவாயு ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக குறுகிய  கால கடனுடன் செயற்படவேண்டியிருந்தது.

அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் காரணமாக தற்போது பொருளாதாரம் சாதகமான நிலைக்குத் திரும்பியுள்ளது. வெளிநாட்டு அந்நிய செலாவணி வங்கிகளுக்கூடாக நாட்டுக்கு கிடைக்கவேண்டும். எமக்கு அன்றாடம் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு நாணயம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி கடனுடன் செயற்படும் நிலையிலிருந்து நாம் மீளமுடிந்துள்தென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...