காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு ஓகஸ்ட் 31 வரை அபராதம் இல்லை

- மேல் மாகாண வாகன அனுமதிப்பத்திரம் 5 நாட்களும் வழங்கப்படும்

மேல் மாகாணத்தில் ஜூன் 29 முதல் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு ஓகஸ்ட் 31 வரை தண்டப்பணம் அறவிடப்படாது என, மேல் மாகாண பிரதான செயலாளர் ஜே.எம்.சி. ஜயந்தி விஜேதுங்க அறிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது எரிபொருள் தொடர்பான சிக்கல்கள் வழமைக்கு திரும்பியுள்ளதால் வாரத்தின் 5 நாட்களும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கவும் தீர்மானித்துள்ளதாக ஜயந்தி விஜேதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் இணையத்தளமான motortraffic.wp.gov.lk ஊடாக ஒன்லைன் மூலமாக மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் கருதி ஊழியர்கள் கடமைக்கு அழைப்பதில் உள்ள சிக்கல்களை கவனத்திற் கொண்டு, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு ஜூலை 29ஆம் திகதி வரை அபராதம் விதிக்கப்படாது என மேல்மாகாண பிரதான செயலாளர் ஜே.எம். ஜயந்தி விஜேதுங்க கடந்த ஜூன் 29ஆம் திகதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...