Wednesday, August 17, 2022 - 8:52pm
- Litro விலைகளுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் அதிகம்
12.5kg லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய அதன் ஏனைய சிலிண்டர் வகைகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- 12.5kg: ரூ. 6,850 இலிருந்து ரூ. 5,800 ஆக ரூ. 1,050 இனால் குறைப்பு
- 5kg: ரூ. 2,740 இலிருந்து ரூ. 2,320 ஆக ரூ. 420 இனால் குறைப்பு
- 2kg: ரூ. 928
அதற்கமைய புதிய விலைகள்:
- 12.5kg: ரூ. 5,800
- 5kg: ரூ. 2,320
- 2kg: ரூ. 928
ஆயினும் தற்போதுள்ள Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் குறைக்கப்பட்ட லிட்ரோ (Litro) சிலிண்டர்கள் விலை
- 12.5kg: ரூ. 4,664
- 5kg: ரூ. 1,872
- 2.3kg: ரூ. 869
கடந்த ஜூன் மாதம் லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன
- 12.5kg: ரூ. 4,199 இலிருந்து ரூ. 6,850 ஆக ரூ. 2,651 இனால் அதிகரிப்பு
- 5kg: ரூ. 1,136 இலிருந்து ரூ. 2,740 ஆக ரூ. 1,604 இனால் அதிகரிப்பு
றிஸ்வான் சேகு முகைதீன்
Add new comment