3,120 மெ.தொன் லாப் கேஸுடன் கப்பல் நேற்று நாட்டுக்கு வருகை

விநியோக நடவடிக்கைகள் விரைவில்

சமையல் எரிவாயு 3,120 மெற்றிக் தொன் தொகையுடன் கப்பலொன்று நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று முற்பகல் மேற்படி கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் கப்பலிலிருந்து சமையல் எரிவாயுவை இறக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

வழமையான நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் மிக விரைவாக அதனை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக லாப் கேஸுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இந்த நிலையில் லாப் கேஸ் பாவனையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இச்சந்தர்ப்பத்தில் நேற்று மேற்படி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...