புத்தளம் லேஜன்ஸ் சம்பியன்

புத்தளம் லேஜன்ஸ் கால்பந்தாட்ட கழகத்துக்கும் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்துக்குமிடையில் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி கடந்த ஞாயிறன்று (14) புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

இளமைக் காலத்தில் தத்தமது கழகங்களுக்கு விளையாடியவர்கள் ஒட்டுமொத்தமாக லேஜன்ஸ் அணியிலும், லிவர்பூல் உதைபந்தாட்ட கழகத்தின் முன்னாள் முன்னணி வீரர்கள் லிவர்பூல் அணியிலும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த போட்டியில் 02–01 கோல்களினால் லேஜன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

புத்தளம் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...