ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம்

பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சட்ட ரீதியாக மாத்திரம் நுழைவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகத்தினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறில்லை எனில் ஆட் கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாக மக்களின் பணத்தை பெற்று ஏமாற்றும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தநிலையில், அவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...