இந்திய சுதந்திர தினத்திற்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் தொப்புள் கொடி உறவு கொண்ட இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின பெறுவிழா சிறப்புபெற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு வெளியே அதிகளவு இந்திய வம்சாவளி மக்கள் பரந்துபட்டு வாழ்கின்றனர்.

இந்தியாவின் உதவிகள் பல இலங்கையில் வாழும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் கிடைத்துள்ளது. இதில் இந்திய வீடமைப்பு, கல்விக்கான உதவிகள் உள்ளிட்ட தற்போது வழங்கப்படும் நிவாரண பொருட்கள் என குறிப்பிட முடியும்.

இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கும் பங்கு உண்டு. எனவே இந்திய சுதந்திர தினத்தை யொட்டி மிகவும் அன்னியோன்யத்துடனும், பெரும் உவகையுடனும் தனது வாழ்த்துகளை இ.தொ.கா தெரிவித்து கொள்கிறது.


Add new comment

Or log in with...