இலங்கை கடற்படைக்கு கண்காணிப்பு விமானம்

இலங்கையின் கோரிக்கையை ஏற்று இந்தியா கையளிப்பு

இலங்கை அரசின் கோரிக்கையையேற்று இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் -228கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்திய அரசாங்கம் இந்நாட்டுக்கு வழங்கியுள்ளது.

புதிய விமானம் ஒன்றை தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், ஆரம்ப இரண்டு ஆண்டுகளுக்கு விமானத்தை இலவசமாக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் இரண்டு ஆண்டுகளின் முடிவில் புதிய டோனியர் -228கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இக் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி தனது கடற்படைக்கு உள்வாங்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...