இந்தியாவின் உலர்வலய சரணாலயங்கள்

இந்தியாவின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த உலர் வலய சரணாலயங்களில் மொத்த எண்ணிக்கை 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ராம்சார் பட்டியல் என அழைக்கப்படும் இப்பட்டியலில் மேலும் பத்து உலர்வலய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. இப்புதிய பத்து இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆறு இடங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனையவை கோவா, கர்நாடகம், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவையாகும்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. இந்தியாவின் மொத்த 64 உலர்வலய இடங்களில் மொத்த பரப்பளவு 12 லட்சத்து 50 ஆயிரத்து 361 ஹெக்டேயர்களாகும். கடந்தவாரம் மேலும் ஐந்து உலக முக்கியத்துவம் வாய்ந்த உலர் வலய சரணாலயங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. பல்லிக்கரணை, பிச்சாவரம், மிசோரத்தைச் சேர்ந்த பாலா உலர்காடு, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சாக்கிய சாகர் என்பனவே பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட இடங்களாகும்.


Add new comment

Or log in with...