ஹொக்கி நடுவர் மஹேஷ் இங்கிலாந்துக்குப் பயணம்

இங்கிலாந்தின் நொட்டிங்ஹாமில் இரண்டாவது முறையாக நடைபெறும் சிரேஷ்ட உலகக் கிண்ண ஹொக்கி போட்டிக்கு நடுவராக சர்வதேச ஹொக்கி நடுவர் மஹேஷ் அபேவிக்ரம செயற்படவுள்ளார்.

இன்று ஓகஸ்ட் 12 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்தப் போட்டிகள் வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் 26 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை தேசிய அணி ஒன்று முதல் முறையாக பங்கேற்கிறது.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவனான மஹேஷ் அபேவிக்ரம இலங்கையில் இதுவரை தோன்றிய பதினொரு சர்வதேச ஹொக்கி நடுவர்களில் ஒருவராவார்.


Add new comment

Or log in with...