தலைமுறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை பேணி எல்லா வயதினருக்குமான உலகத்தை உருவாக்குவோம்!

சர்வதேச இளைஞர் தினம் இன்று

இளைஞர்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும், இன்றைய உலகளாவிய சமூகத்தில் இளைஞர்களின் திறனைக் கொண்டாடுவதற்குமென ஆண்டுதோறும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது.

இன்றைய நாள் இளைஞர்களின் குரல்கள், செயல்கள், முன்முயற்சிகள், அவர்களின் அர்த்தமுள்ள, உலகளாவிய மற்றும் சமமான ஈடுபாட்டைக் கொண்டாடுவதற்கும் முக்கிய நீரோட்டத்துக்கும் வாய்ப்பளிக்கிறது. 17 டிசம்பர் 1999 அன்று, இளைஞர்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களின் உலக மாநாடு நடைபெற்ற போது ஓகஸ்ட் 12 ஆம் திகதியை சர்வதேச இளைஞர் தினமாக அறிவிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அது பின்னர் அங்கீகரிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையினால் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இளைஞர் தினத்துக்கான (International Youth Day 2022) கருப்பொருளின் நோக்கம் 'தலைமுறைகளுக்கு இடையிலான ஒற்றுமை: எல்லா வயதினருக்கும் ஒரு உலகத்தை உருவாக்குதல்' (Intergenerational Solidarity: Creating a World for All Ages) என்பதாகும்.

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய எல்லாத் தலைமுறையினருக்கும் நடவடிக்கை தேவை என்ற செய்தியை விரிவுபடுத்துவது அவசியம். 2022 சர்வதேச இளைஞர் தினம், தலைமுறைகளுக்கு இடையேயான ஒற்றுமைக்கான சில தடைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். குறிப்பாக வயது வித்தியாசம் என்பது இளைஞர்கள் மற்றும் வயதானவர்களைப் பாதிக்கிறது, அதேநேரத்தில் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

அதுமட்டுமல்லாது ஒரு நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைய, உலகம் அனைத்து தலைமுறையினரின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். தலைமுறை தலைமுறையாக ஒற்றுமை என்பது நிலையான வளர்ச்சிக்கு முக்கியமாகும். 'யாரும் பின்தங்கியிருக்கவில்லை' என்பதை உறுதிப்படுத்த, வெற்றிகரமான மற்றும் சமமான தலைமுறைகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கு இளைஞர்களாகிய நாம் ஒத்துழைக்க வேண்டும்.

கொவிட்-19 தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டில் நாம் செல்லும் போது, எல்லா தலைமுறையினரின் பலம் மற்றும் அறிவைப் பயன்படுத்தும் விதத்தில் செயற்படுவது மிகவும் முக்கியம்.

சர்வதேச இளைஞர் தினம் வெறுமனே குழந்தைகளை நேரடியாக ஊக்குவிப்பதை விட குழந்தைகளின் வாழ்க்கையில் உறுதியான முன்னேற்றங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்கான முன்னுரிமையை வழங்குகிறது. ஐ.நாவினால் உருவாக்கப்பட்ட பதினைந்து முன்னுரிமைகளில் எச்.ஐ.வி நோய்களைக் குறைத்தல், குழந்தைப் பருவத்தின் பசியை எதிர்த்துப் போராடுதல் மற்றும் கல்விக்கான கூடுதல் அணுகலை வழங்குதல் போன்றன முன்னுரிமை பெறுகின்றன.

இளைஞர்களில் அதிகமானோர் வேகமானவர்களாகவும், விவேகமற்றவர்களாகவும், குறுகிய நோக்குடையவர்களாகவும் கருதப்படுகிறார்கள். ஆனாலும் தென்னாபிரிக்காவில் அவர்கள் நிறவெறியை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகித்தனர், அதனால்தான் அவர்கள் தேசிய இளைஞர் தினத்தை சோவெர்டோ தினம் (Sowerto Day) என்று அறிவித்தனர். நமது உலகை வடிவமைப்பதில் இளம் தலைமுறை மிகவும் முக்கியமானது. தற்போதைய உலக இளைஞர்களின் எண்ணிக்கை (15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 'இளைஞர்கள்' என வரையறுக்கப்பட்டுள்ளது) 1.2 பில்லியன் ஆகும். அந்த எண்ணிக்கை வறிய நாடுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது.

பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஒரு வட்டமேசை விவாதத்தைத் தொடங்குங்கள். இது பெற்றோர் மற்றும் குழந்தைகள் அல்லது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே இருக்கலாம். ஆண்டின் கருப்பொருளைச் சுற்றியுள்ள தலைப்புகளைக் கொண்டு வாருங்கள், இளைய தலைமுறையினர் சொல்வதைக் கேளுங்கள்.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...