மே 09 அமைதியின்மை: இதுவரை 3,310 பேர் கைது; 1,182 பேருக்கு விளக்கமறியல்

- இன்று தங்காலையில் 55 வயது நபர் கைது

கடந்த மே 09ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் கலவரங்கள் காரணமாக உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டமை தொடர்பான 858 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3,310 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 1,182 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, 2,128 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இன்றைய தினம் (11) தங்காலை பொலிசாரால் 55 வயதான சந்தேகநபர் ஒருவர் தங்காலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்றைய தினம் (11) தங்காலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நாளை (12) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...