புதிய கூட்டணியின் பெயர் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும்

வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 10 சுயேட்சை கட்சிகளின் புதிய கூட்டணியின் பெயர் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அந்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சர்வகட்சி அரசாங்கம் அமைச்சுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் அல்ல, மாறாக இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து அனைவரும் வெளியேறக்கூடிய ஒரு திட்டத்தை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...