தேநீர் விருந்துபசார செலவை செலுத்திய ஜனாதிபதி ரணில்!

தனது சொந்த பணத்திலிருந்து செலுத்தினார்

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று நடைபெற்ற தேநீர் வைபவத்துக்கான முழுச் செலவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பணத்தில் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அன்றைய தினம் தேநீர் விருந்துக்கு செலவிடப்பட்ட 2,72,000 ரூபா ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்திலிருந்து செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டான காலப்பகுதியில் அரசாங்கச் செலவுகள் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசு மாரசிங்க தெரிவித்தார்.


Add new comment

Or log in with...