அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி சம்பியன்

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணி அம்பாறை மாவட்ட சம்பியனாக தெரிவாகி கிழக்கு மாகாண மட்டப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இச்சுற்றுப்போட்டி பாலமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அமீர் அலி தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 08 பிரதேச செயலக அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு நிந்தவூர் பிரதேச செயலக அணியும், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணியும் தெரிவு செய்யப்பட்டன.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...