பொலிஸ் உத்தியோகத்தரின் கைவிரலை கடித்த பெண் கைது

எசல பெரஹர உற்சவத்தின் போது கடமையாற்றிய பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி மீது குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலின் போது தாக்குதல் நடத்திய குழுவிலுள்ள பெண் ஒருவர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கை விரலை கடித்ததால், கண்டி தேசிய வைத்தியசாலையில் அவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன.

குடிபோதையில் தவறாக நடந்து கொண்ட ஒரு குழுவில் இருந்த பெண்ணும் மற்றுமொரு நபரும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சரத் விஜேசிங்கவே இவ்வாறு சம்பவத்தின் பொழுது காயமடைந்துள்ளார்.

பெண்ணால் கடித்து தாக்கப்பட்ட நிலையில், பிரதான பொலிஸ் பரிசோதகர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணுடன் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் கண்டி, அகவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

(எம்.ஏ.அமீனுல்லா)

 


Add new comment

Or log in with...