- நிலவும் செலவுகளின் அடிப்படையில் விலை திருத்தம்
- ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அனுமதி
சமையல் எரிவாயுக்கான திருத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொடர்ச்சியான சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செலவுகளை ஈடுசெய்வதனை அடிப்படையாகக் கொண்டு, தாமதமின்றி விலைச் சூத்திரத்தமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை நேற்று (08) அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, குறித்த அச்சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 05ஆம் திகதி சமையல் எரிவாயு விலைகளைத் திருத்தம் செய்வதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
றிஸ்வான் சேகு முகைதீன்
Add new comment