மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம்

மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளுக்காக மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்ததம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிலக்கீழ் எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் மின்சார சக்தியைப் பயன்படுத்தி இயங்குகின்ற வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மின்சார மோட்டார் முச்சக்கர வண்டிகளை இலங்கையில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும், அதற்கான சட்ட ஏற்பாடுகள் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் காணப்படாமையால், குறித்த சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் குறித்த சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி, மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...