- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்
தேநீர் கோப்பையொன்றின் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (09) முதல் இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, சாதாரண சோற்றுப் பொதி ஒன்றின் விலையை 10% இனால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இன்று முதல் Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம், உணவகங்களில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளையும் , அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் 10% ஆல்அதிகரிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment