குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதி

மஸ்கெலியா சமனெளிய சிங்கள பாடசாலையில் நேற்று மதியம் குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் இரண்டு மாணவர்கள் உட்பட ஆசிரியர் ஒருவரும் அடங்குவர்.

நேற்று காலை கடும் காற்று காரணமாக அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடு கலைந்து பாடசாலையிலிருந்த மாணவர்கள், ஆசிரியர்களை குளவி தாக்கியுள்ளது. இதனையடுத்து மாணவர்களும் ஆசிரியரும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குளவிக் கொட்டுக்கு இலக்காகாமல் ஏனைய மாணவர்களுக்கு உடன் விடுமுறை வழங்கி காப்பாற்றியுள்ளனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...