ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த கஜேந்திரகுமார் நிபந்தனை

சம்மதித்தால் மட்டுமே சந்திப்பேன் என்கிறார்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் அவசரகாலச் சட்டம் இரத்துச்செய்யப்படும் வரை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில்  ஈடுபடப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனை எதிர்காலத்தில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை 10 ஆம் திகதியன்று சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்க தமக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றையதினம் (08) பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Add new comment

Or log in with...