எருமையை விடக் குறைந்த விலைக்கு சிங்கங்கள் ஏலம்

பாகிஸ்தானின் லாகூர் சபாரி மிருகக்காட்சி சாலையில் உள்ள 12 சிங்கங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.

அதன் மூலம் இடப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதோடு, இறைச்சி வாங்கும் செலவும் குறையும் என்று அந்த மிருகக்காட்சி சாலையின் பிரதிப் பணிப்பாளர் தன்வீர் அஹ்மட் ஜஞ்சுவா தெரிவித்தார்.

ஆனால் சிங்கங்களுக்கு முறையான பராமரிப்பும் உணவும் அளிக்கக்கூடியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும். அங்கு தற்போது 29 சிங்கங்கள் உள்ளன. அவற்றில் 2 வயதிலிருந்து 5 வயதுக்கு இடைப்பட்ட 12 சிங்கங்கள் வரும் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 11) ஏலத்தில் விடப்படும். இதில் சிங்கம் ஒன்றின் குறைந்தபட்ச ஏலத் தொகையாக 1.5 இலட்சம் ரூபா பாகிஸ்தான் நாணயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு எருமை மாட்டின் விலையை விடவும் இரண்டு மடங்கு குறைவாகும்.


Add new comment

Or log in with...