ஓகஸ்ட் 03 கைதான ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இன்றையதினம் (08) முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அவரை ரூபா. 5 இலட்சம் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடந்த புதன்கிழமை (03) பிற்பகல் அச்சங்கத்தின் தலைமையகத்தில் வைத்து கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த மே 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியில் விதிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இன்றையதினம் நகர்த்தல் மனு தாக்கல் செய்யப்பட்டு, விடுக்கப்பட்ட பிணைக் கோரிக்கைக்கு அமைய, அவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...