பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஜூலை 18ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால நிலை பிரகடன ஒழுங்கு விதிகளை திருத்தியமைத்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (அ) மற்றும் 365 (ஆ) நீக்கப்பட்டு, அவசரகாலச் சட்டங்கள் தொடர்பாக சட்டத்தின் 408 மற்றும் 410 இலிருந்து 420 வரையிலான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன், மேல் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர கால உத்தரவுகளின் கீழ், குற்றவியல் சட்டத்தின் 365, 365 (அ) மற்றும் 365 (ஆ) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கடந்த ஜூலை 21ஆம் திகதியும் ஒரு திருத்தம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் சனாதிபதி என்பது இலங்கை பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சனாதிபதி என பொருள்படுமென திருத்தம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.
Add new comment