டீசல் விலை மாத்திரம் ரூ. 10 குறைப்பு; புதிய விலை ரூ. 430

- ஏனைய எரிபொருட்கள் விலைகளில் மாற்றமில்லை

இன்று (01) இரவு 10.00 மணி முதல் (Auto) டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் (CEYPETCO) இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாட்டில் ஒரே விலையில் எரிபொருளை வழங்கும் பொருட்டு குறித்த விலைக் குறைப்பை தாங்களும் அமுல்படுத்துவதாக LIOC யும் அறிவித்துன்னது.

அதற்கமைய, ரூ. 440 ஆக உள்ள டீசலின் விலை ரூ. 430 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள National Fuel Pass எனப்படும் QR குறியீட்டின் அடிப்படையில் மாத்திரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விநியோகிப்பது கட்டாயம் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 17ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் எரிபொருட்களின் விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் LIOC நிறுவனங்கள் ரூ. 10 முதல் 20 ஆக குறைத்திருந்தன.

<<< இறுதியாக CEYPETCO/LIOC மேற்கொண்ட எரிபொருள் விலை திருத்த விபரம் >>>

பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 470 இருந்து ரூ. 450 (ரூ. 20 ஆல் குறைப்பு)
ஒக்டேன் 95: ரூ. 550 இருந்து ரூ. 540 (ரூ. 10 ஆல் குறைப்பு)

டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 460 இருந்து ரூ. 440 (ரூ. 20 ஆல் குறைப்பு)
சுப்பர் டீசல்: ரூ. 520 இருந்து ரூ. 510 (ரூ. 10 ஆல் குறைப்பு)

அதற்கமைய எரிபொருட்களின் புதிய விலைகள்

  • பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 450
  • பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 540
  • ஒட்டோ டீசல்: ரூ. 430
  • சுப்பர் டீசல்: ரூ. 510
  • மண்ணெண்ணெய்: ரூ. 87

Add new comment

Or log in with...