2023ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஓகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக, 2023 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீடிக்குமாறு பெற்றோரிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதற்கு அமைய குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டல்களை கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்ததோடு, அதன் முடிவுத் திகதி ஜூலை 16ஆம் திகதி என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க அதன் விண்ணப்ப இறுதித் திகதி ஓகஸ்ட் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதோடு, பின்னர் மீண்டும் ஓகஸ்ட் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Add new comment