வன்முறையாளர்கள் இனி வெளிநாடு செல்ல முடியாது

அரச தொழில் வாய்ப்புக்கும் இடமில்லை என்கிறார் சரத் வீரசேகர

அவசரகால நிலை தொடர்பில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பயப்பட வேண்டும். இல்லையெனில் நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லாது போய்விடும்

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்தகைய குற்றச்செயல் புரிந்தவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது. அதுமட்டுமல்ல அவர்கள் அரச தொழில் உட்பட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் முடியாதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர எம்.பி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகால நிலை தொடர்பில் பயப்பட வேண்டும். சாதாரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாதென்றும் சரத் வீரசேக்கர எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால நிலைக்கான அனுமதியை பெற்றுக் கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

வழக்கு, நீதிமன்றம் என்று சென்றால் ஆர்ப்பாட்டத்துக்கு தூண்டி விடுபவர்கள் எவரும் பாதுகாக்க வரப்போவதில்லை. இளைஞர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டுமென்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.

அமைதியான ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை வன்முறைக்கு இடமளிக்க முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.

குழப்பகரமான சூழ்நிலையை பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவசரகால நிலையை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். ஆர்ப்பாட்டமென்ற போர்வையில் பொதுமக்களின் சொத்துக்கள் வீடுகள் அரச வளங்களை சேதப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. அவற்றை தடுப்பதற்காகவே அவசரகால நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரகால நிலை நடைமுறைப்படுத்தப்படுமானால் தேவையான போது இராணுவத்தினரை கடமைக்கு அழைக்க முடியும். வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கும் அதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போதைய போராட்டம் நியாயமான காரணங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட நெருக்கடி நிலைமை காரணமாகவே மக்கள் ஆத்திரப்பட்டனர். அதற்கான ஆர்ப்பாட்டம் நியாயமானது.

ஆர்ப்பாட்டம் செய்வது மக்களின் உரிமையாகும். எனினும் அது வன்முறையாக வெடிக்கக் கூடாது. அதேவேளை அரசாங்கத்தை கவிழ்க்கும் வகையில் அதனை முன்னெடுப்பது குற்றமாகும்.அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் ஜனாதிபதியை வெளியேற்றுவதற்கும் பிரதமரை வெளியேற்றுவதற்கும் பிரபுக்களை படுகொலை செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அது குற்றவியல் சட்டத்தின்படி மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

போராட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மனிதாபிமானமற்ற ரீதியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சித்தனர்.அவ்வாறானால் நாம் தற்போது பாராளுமன்றத்தில் இருக்கவும் முடியாது.

அதனையடுத்து அவர்கள் நீதிமன்றத்தையும் முற்றுகையிட நடவடிக்கை எடுத்திருப்பார்கள். நீதிபதிகளுக்கும் அழுத்தம் கொடுக்க முயற்சித்திருப்பார்கள். அவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவே அரசாங்கம் அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அவசர கால நிலைக்கு வன்முறையில் ஈடுபடுபவர்களே பயப்பட வேண்டும். சாதாரண ஆர்ப்பாட்டக்காரர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது உங்களை தூண்டிவிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடச் செய்பவர்கள் நீங்கள் வழக்கு, நீதிமன்றம் என்று சென்றால் உங்களை காப்பாற்ற வரமாட்டார்கள். அதனை கவனத்திற் கொண்டு தமது எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டுமென்று நான் தனிப்பட்ட ரீதியில் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம் 


There is 1 Comment

ஜனவரி 27, 2020 முதல் கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் 19 இன் விளைவாக மிகுந்த மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அனுபவித்த அதிருப்தியடைந்த மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு திறப்பைக் கொடுத்த போராட்டம் என்று அழைக்கப்படும் மனப்பாடம் " ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் வியாபாரிகள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, ஊழல் அரச அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, "அரகாலை" தேசத்திற்கு காட்டியதைச் செய்து தெருக்களில் இறங்கினார். அதிகாரிகள் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவது நிலைமையை மேலும் மோசமாக்கியது மற்றும் ஜே.வி.பி மற்றும் எப்.எஸ்.பி போன்ற தீவிரவாத குழுக்களுக்கு 2020 மார்ச் 9 முதல் நடந்த அனைத்து வன்முறைகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்க தங்கள் அனுதாபிகளை இணைக்கும் சூழலை உருவாக்கியது. ஜே.வி.பி மற்றும் எப்.எஸ்.பி./தீவிரவாத சிந்தனைகளை அனுதாபிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், "அரகலயா"வின் வெப்பத்தை நிலைநிறுத்துவதற்கான அனைத்து சட்ட ஆதரவையும் இலவசமாக வழங்கியது. ஜாமீன் விண்ணப்பத்தில் சட்டப்பூர்வமான கைதுகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அவர்களின் "சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் திரும்புவதற்காக. வருத்தம் தெரிவிக்கிறேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தக் குற்றவாளிகளின் மனநிலையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார், மேலும் தொடக்கத்தில் துளிர்விடவில்லை". உண்மையாகவே அவர் அதற்கான விலையைக் கொடுத்தார். ஆனால் கோட்டாபேயும் அதைச் சிறிதும் செய்யத் தவறிவிட்டார் (கடந்த 31 மாதங்களில் அவர் வாக்குறுதியளித்தபடி அனைத்து ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களையும்) சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்கவும், இது உங்கள் அரகல்யா அல்ல TH, இது அதிக ஆழமான ஈடுபாடுகளைக் கொண்டுள்ளது. எந்த புதிய அரசியல் சக்திகள் நாட்டைப் பொறுப்பேற்றாலும், எழுப்பப்படும் மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் இருப்பது மக்களின் உரிமை. நேற்றைய அவசர விவாதத்தின் போது, ​​சில எம்.பி.க்களால் உண்மையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வெளிப்பட்டது, ஆனால் அதற்கு மேலும் உள்ளது. தற்போது நடந்துள்ள சில கைது சம்பவங்கள் அந்த வெளிப்பாடுகளை உறுதிப்படுத்துகின்றன. 2022 மார்ச் 22 முதல் எழுத்தாளர் பல சந்தர்ப்பங்களில் பொறுப்பானவர்களின் கவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தமிழிலும் பல யூட்யூப் சேனல்களால் ஆதரிக்கப்படும் கலவரக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடையே மிகவும் ஆபத்தான "தூண்டுதல்/தூண்டுதல்" மனநிலையை விளையாடும் ஒரு குறிப்பிட்ட மீடியா டிஜிட்டல் சேனலின் செயல்பாடுகள் குறித்தும் எழுத்தாளர் எச்சரித்திருந்தார். குறைந்த பட்சம் 69 இலட்சம் வாக்காளர்கள் கேட்கும் அனைத்து பதில்களையும் ஜனாதிபதி ரணிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமும் கண்டறிந்து குற்றவாளிகளை குறுகிய காலத்திற்குள் சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்று பொது மக்கள் இப்போது உணர்கிறார்கள். Noor Nizam - நூர் நிசாம் - சமாதானம் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட், "முஸ்லிம் குரல்" அழைப்பாளர், தேசப்பற்றுள்ள குடிமகன்.

Add new comment

Or log in with...