ரணிலின் எம்.பி. பதவியை பறிப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை முன்னணியின் செயலாளரும்  சிவில் சமூக ஆர்வலருமான நாகானந்த கொடித்துவக்குவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான பரிசீலனை இன்றையதினம் (19) காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன, ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழுவின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த மனுவை தள்ளுபடி செய்யும் உத்த்தரவு வழங்கப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளை கருத்தில் கொண்ட நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...