Thursday, July 14, 2022 - 11:54am
இன்று (14) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (15) அதிகாலை 5.00 மணி வரை கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதே தொடர்பில் காணப்படும் இழுபறி நிலை காரணமாக ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக, நேற்றைய தினம் (13) நண்பகல் முதல் இன்று (14) அதிகாலை 5.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
PDF File:
Add new comment