பின்லாந்து, சுவீடனை எச்சரிக்கிறார் புட்டின்

நேட்டோ கூட்டணி பின்லாந்திலும் சுவீடனிலும் துருப்புகளை இறக்கினால், ரஷ்யா கனிவான விதத்தில் பதிலடி கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

உக்ரைனுடன் இருக்கும் பிரச்சினை, சுவீடனும் பின்லாந்துடனும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அதனால் அந்த இரு நாடுகளும் தாராளமாக நேட்டோ கூட்டணியில் சேரலாம் என்று அவர் கூறினார். ஆனால் அங்கு இராணுவத் துருப்புகள் இறக்கப்பட்டால், இரு நாடுகளால் ரஷ்யாவிற்கு ஏற்படும் மிரட்டலுக்கு ஏற்ப அவையும் அச்சுறுத்தப்படும் என்றார் ஜனாதிபதி புட்டின்.

நேட்டோ கூட்டணியில் இணைவதால் பின்லாந்துடனும் சுவீடனுடனும் ரஷ்யா கொண்டுள்ள உறவு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் படையெடுப்பு, திட்டமிட்டபடி செல்வதாக அவர் சொன்னார்.

அதை முடிவுக்குக் கொண்டுவரக் காலக்கெடு எதுவும் தேவையில்லை என்றார் புட்டின்.


Add new comment

Or log in with...