2 பிள்ளைகளுடன் குளத்தில் குதித்த தாயும், 5 வயது குழந்தையும் பலி

தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டி, சந்திரிகா குளத்தில் குளத்தில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அவரது 5 வயது மகள் உயிரிழந்துள்ளார்.

இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், எம்பிலிபிட்டிய, சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான குறித்த பெண், தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகன் ஆகியோருடன் இவ்வாறு தற்கொலை செய்வதற்காக குளத்தில் குதித்துள்ளார்.

இதன்போது, குறித்த 11 வயது சிறுவன் கரைக்கு வருவதற்காக கூக்குரலிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் அவர்களை மீட்டு எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில், 11 வயதான உயிராபத்துகள் இன்றி சிகிச்சை பெற்று வருவதோடு, அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாய் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பெண்ணின் கணவர், சம்பளத்திற்காக மாடு மேய்க்கும் தொழில் செய்பவர் எனவும் இப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் உடமையிலிருந்து ரூ. 2,000 பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பெண் எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்று அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

தாம் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கான மருந்தை உட்கொள்வது மிகவும் சிரமமாக இருப்பதால் குறித்த முடிவை மேற்கொள்ள தீர்மானித்ததாக, குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

  • தேசிய மனநல உதவி இலக்கம் 1926
  • இலங்கை சுமித்ரயோ 011 2696666
  • CCC line 1333

Add new comment

Or log in with...